அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி*

X
அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று மாலை வேளையில் கருமேகங்கள் சூழ்ந்து அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி, கோவிலாங்குளம், கோபாலபுரம், ராமானுஜபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் மேலாக இடி மின்னலுடன் கன மழை கொட்டி தீர்த்தது. அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்தடுத்து பகுதி வரும் மலை காரணமாக ஆடி பட்டத்தில் விதை விதைத்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் மழையால் அருப்புக்கோட்டை பகுதிகளில் பல நாட்களாக நிலவி வந்த கடுமையான வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story

