ஆற்றில் குளித்த பிளஸ் 1மாணவன் சாவு

X
குமரி மாவட்டம் தக்கலை பகுதியில் வசிப்பவர் களியக்காவிளையை சேர்ந்த ஷேக் முகமது. இவரது மகன் பயாஸ் அகமது (16) தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று நண்பர்களுடன் வள்ளியற்றில் குளிக்க சென்றனர். ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருக்கும் போது பயாஸ் அகமது தனக்கு மயக்கம் வருவதாக கூறினார். நண்பர்கள் கரைக்கு கொண்டு வந்ததும் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பயாஸ் அகமது ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கொற்றிகோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story

