நாமக்கல் கூட்டுறவு காலனி ஸ்ரீ வல்லப விநாயகர் கோவில் டிசம்பர் 1 ம் தேதி மஹா கும்பாபிஷேகம்!

சனிக்கிழமை அதிகாலை மங்கள இசை, கணபதி ஹோமத்துடன் தொடங்கி தீபாராதனை நடைபெற்று, தொடர்ந்து காவிரியில் தீர்த்தம் எடுத்து வருதல், முளைப்பாரி அழைத்தல் நிகழ்வு நடைபெற்றது.கும்பாபிஷேக நிகழ்வுகளை நமது கிங் 24×7 யூ டியூப் சேனலில் நேரலை செய்யப்படுகிறது கண்டு மகிழுங்கள்.
₹நாமக்கல்- மோகனூர் சாலை கூட்டுறவு காலனியில் உள்ள ஸ்ரீ வல்லப விநாயகர் கோவிலில், வல்லப விநாயகர், ஸ்ரீ ராஜராஜேஸ்வரி, லட்சுமி, சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு, நூதன ஆலய மஹா கும்பாபிஷேகம் விழா, டிசம்பர் 1 ஆம் தேதி, காலை 6 மணி முதல் 7 மணிக்குள் நடக்கிறது.* அதை முன்னிட்டு, நவம்பர் 29 ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை மங்கள இசை, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது தீபாராதனை நடைபெற்று ,தொடர்ந்து காவிரியில் தீர்த்தம் எடுத்து வருதல், முளைப்பாரி அழைத்தல் நிகழ்வு நடைபெற்றது.முதல்கால பூஜை சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைப்பெற்றது, நவம்பர் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு இரண்டாம் கால பூஜை, மாலை 6 மணிக்கு மூன்றாம் கால பூஜை, கோபுர கலசங்கள் வைத்தல், அஸ்டபந்தன மருந்து சாத்துதல் நடக்கிறது.
டிசம்பர் 1 ஆம் தேதி திங்கட்கிழமை அதிகாலை, 4 மணிக்கு, நான்காம் கால பூஜை, 6 மணிக்கு, யாத்ரா தானம் செய்து கலசங்கள் புறப்படுதல், 6.30 மணிக்கு ஸ்ரீ வல்லப விநாயகர் மற்றும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஸ்வாமிக்கு மகா கும்பாபிஷேகம், 7 மணிக்கு, மஹா அபிஷேகம், தசதானம் தசதரிசனம், தீபாராதனை, பிரசாதம் வழங்கல், அன்னதானம் வழங்கல், மாலை, 5 மணிக்கு, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.
பக்தர்கள் யாகத்திற்கு தேவையான பூஜைப் பொருட்களை வழங்கலாம். விழா ஏற்பாடுகளை காந்திநகர் கூட்டுறவு காலனி பொதுமக்கள் செய்துள்ளனர்.மேற்கண்ட கும்பாபிஷேக நிகழ்வுகளை நமது கிங் 24×7 யூ டியூப் சேனலில் நேரலை செய்யப்படுகிறது கண்டு மகிழுங்கள்.
Next Story