சிவன்மலை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளி கைது - 1 கிலோ கஞ்சா பறிமுதல்
Kangeyam King 24x7 |20 Dec 2025 7:46 PM ISTதிருப்பூர் மாவட்டம் காங்கேயம் சிவன்மலை அருகே வடமாநில தொழிலாளி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக காங்கேயம் போலீசார் கைது செய்தனர்.
காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை மிகவும் பிரசித்தி பெற்ற மலைக்கோயில் ஆகும். மேலும் சிவன்மலை பகுதியில் வடமாநில தொழிலாளிகள் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது அடுத்து காங்கேயம் காவல்துறையினர் சிவன்மலை பகுதியை ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அக்தர் அன்சாரி ( வயது 28) என்பவர் சிவன்மலை பகுதியில் வீடு வாடகை எடுத்து குடும்பத்துடன் வசித்து வந்ததுடன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதை அடுத்து காவல்துறையினர் அக்தர் அன்சாரி பிடித்து விசாரணை செய்ததில் அவனிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அக்தர் அன்சாரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் கோவை சிறையில் அடைத்தனர்.
Next Story


