செட்டியார்பட்டி பேரூராட்சி கூட்டத்தில், சாலை அமைத்த போது உடைந்த குழாயை சரி செய்ய ரசீது இன்றி ரூ. 1, 000 வசூல் செய்வது குறித்து திமுக தலைவர் மற்றும் திமுக கவுன்சிலர்கள் இடையே வ

X
ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி பேரூராட்சி கூட்டத்தில், சாலை அமைத்த போது உடைந்த குழாயை சரி செய்ய ரசீது இன்றி ரூ. 1, 000 வசூல் செய்வது குறித்து திமுக தலைவர் மற்றும் திமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி பேரூராட்சி சாதாரண கூட்டம் தலைவர் ஜெயமுருகன் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சியின் 12 வது வார்டில் புதிதாக சாலை அமைத்த போது ஏற்கனவே இணைக்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் கேட்டபோது சாலை அமைத்தவுடன் குழாய்கள் புதுப்பித்து தரப்படும் என ஊழியர்கள் தெரிவித்தனர். ஆனால் உடைக்கப்பட்ட குழாய்கள் மீண்டும் புதுப்பித்து இணைப்பு வழங்குவதற்கு ரசீது இன்றி ரூபாய் 1,000 வசூல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மொத்தம் உள்ள 36 இணைப்புகளில் பணம் வழங்கிய 32 குழாய்கள் மட்டும் மறு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பணம் வழங்காத நான்கு வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்படவில்லை. இது குறித்து இன்று நடைபெற்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் தலைவரிடம் கேள்வி எழுப்பினர். அப்போது சாலை அமைக்கும் திட்ட மதிப்பீடு செய்யும்போது சேதமாகும் பொருட்களுக்கு மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை என்பதால் பணம் வாங்கப்பட்டது என தலைவர் மற்றும் பேரூராட்சி செயலர் தெரிவித்தனர். இது குறித்து தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. அடுத்த திட்டத்திற்கு மதிப்பீடு தயார் செய்யும் போது சேதமாகும் பொருட்களுக்கும் நிதி ஒதுக்கப்படும் என தலைவர் தெரிவித்ததை அடுத்து வாக்குவாதம் முடிவுக்கு வந்தது.
Next Story

