காங்கேயம் அருகே நகை வியாபாரியிடம் ரூ.1 கோடியே 10 லட்சம் கொள்ளை
வெங்கடேஷ் என்பவர் கரூரை சேர்ந்தவர். இவர் தங்க நகை வியாபாரம் செய்து வருகிறார். இவர் டிரைவர் ஜோதி என்பவரை அழைத்துக் கொண்டு ரூபாய் ஒரு கோடியே 10 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு தங்க நகைகள் வாங்குவதற்காக கோவையை நோக்கி வந்து கொண்டிருந்தவரை ஊதியூர் காவல் நிலைய பகுதி சம்பந்தம் பாளையம் பிரிவு அருகே வரும்போது ஹுண்டாய் ஐ20 வெள்ளை கலர் காரில் வந்த நான்கு நபர்கள் வாகனத்தை மறித்து தாங்கள் போலீஸ் எனக் கூறி வெங்கடேஷ் வந்த பலினோ காரில் மூன்று நபர்கள் ஏறி உள்ளனர், பிறகு வாகனத்தை எங்கும் நிறுத்தாமல் அவிநாசிபாளையம் to தாராபுரம் ரோட்டில் செல்லுமாறு மிரட்டியதாகவும் வேங்கி பாளையம் வாய்க்கால் அருகே வரும்போது வாகனத்தை நிறுத்த கூறி வெங்கடேஷிடம் இரண்டு பேக்கில் இருந்த ரூ. 1 கொடியே 10 லட்சம் பணத்தையும் அவர்கள் வைத்திருந்த 3 செல்போன்களையும் பறித்துக் கொண்டு வாகனத்திற்கு பின்னாடியே வந்த ஐ 20 காரில் ஏறி மூன்று நபர்களும் சென்று விட்டதாகவும் பின்பு வெங்கடேஷ் மற்றும் அவருடைய டிரைவர் ஜோதி என்பவரும் மேற்கண்ட சம்பவத்தை இன்று அதிகாலை காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தற்போது காங்கேயம் மற்றும் ஊதியூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து வழிநெடுகிலும் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர். காங்கேயம் அருகே ரூ. 1 கோடியே 10 லட்சம் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story




