அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் சுமார் ரூ 1 கோடியே 10 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் சுமார் ரூ 1 கோடியே 10 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் முடிவடைந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி, ரேஷன் கடை உள்ளிட்ட ரூ 1 கோடியே 10 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வாழ்வாங்கி கிராமத்தில் ரூ 9 லட்சம் மதிப்பில் புதிதாக சமையல் கூடம் கட்டுவதற்கும், பெரியநாயகபுரம் கிராமத்தில் ரூ 30 லட்சம் சமுதாயக்கூடம் கட்டுவதற்கும், அதேபோல போடம்பட்டி கிராமத்தில் ரூ 30 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்டுவதற்கும் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். மேலும் பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார். அதேபோல குருந்தமடம் கிராமத்தில் ரூ 18.42 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியையும், திருவிருந்தாள்புரம் கிராமத்தில் ரூ 22 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியையும் அமைச்சர் திறந்து வைத்தார். அதேபோல சுக்கிலநத்தம் கிராமத்தில் ரூ 10 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலை கடை கட்டிடத்தை திறந்து வைத்து பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பாலகணேஷ், வடக்கு ஒன்றிய செயலாளர் பொன்ராஜ், சுக்கிலநத்தம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சோபனாதேவி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வாழவந்த ராஜ் மற்றும் வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

