ராசிபுரம் அருகே 1 கோடி மதிப்பீட்டில் 107 விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கிய மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ்...

X
Rasipuram King 24x7 |25 Nov 2025 9:21 PM ISTராசிபுரம் அருகே 1 கோடி மதிப்பீட்டில் 107 விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கிய மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ்...
ராசிபுரம் அருகே 1 கோடி மதிப்பீட்டில் 107 விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கிய மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ்... பேருந்து நிழல் கூடம் வேண்டுமென கோரிக்கை வைத்த மூதாட்டி, தனது சொந்த மேம்பாட்டு நிதியிலிருந்து 2.5 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நிழல் கூடம் கட்ட உத்தரவிட்ட எம்பி... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மசக்காளிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகத்தில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ் குமார் கலந்துகொண்டு 1 கோடியே 14 லட்சம் மதிப்பீட்டில் 107 விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கினார். அதனை தொடர்ந்து திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சாதனை திட்டங்களை பொதுமக்களிடையே எடுத்துரைத்து பேசினார். பின்னர் மூதாட்டி ஒருவர் மசக்காளிப்பட்டி பகுதியில் பேருந்திற்காக அரை மணி நேரத்திற்கு மேலாக காத்திருப்பதாகவும், அதனால் அப்பகுதியில் பேருந்து நிழல் கூடம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். உடனடியாக மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் தனது சொந்த மேம்பாட்டு நிதியிலிருந்து 2.5 லட்சம் மதிப்பீட்டில் நிழல் கூடம் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.. இந்த நிகழ்வில் அட்மா குழு தலைவர் ஒன்றிய கழகச் செயலாளர் ஆர்.எம்.துரைசாமி, மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
