வெள்ளகோவிலில் 1 1/4 கிலோ கஞ்சாவுடன் தொழிலாளி கைது

X
வெள்ளகோவில் காவல் ஆய்வாளர் எஸ். ஞானப்பிரகாசம் உதவி ஆய்வாளர் சந்திரன் ஆகியோர் மூலனூர் சாலையில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கரட்டுப்பாளையம் அருகில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்ற நபரிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். அவர் வைத்திருந்த பையில் கஞ்சா பொட்டலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர், ஒடிசா மாநிலம் பத்ராஜ் மாவட்டத்தைச் சேர்ந்த நிலமணி மதன் (வயது 46) என்பதும், அந்தப்பகுதியில் தொழிலாளியாக வேலை செய்து வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த 1 1/4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.
Next Story

