திருப்பூரில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணின் கணவரை கடத்தி 1 லட்சம் ரூபாய் கேட்ட 3 காவலர்கள் உட்பட 6 பேர் கைது!

திருப்பூரில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணின் கணவரை கடத்தி 1 லட்சம் ரூபாய் கேட்ட 3 காவலர்கள் உட்பட 6 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாலியல் தொழில் செய்யும் பெண்ணின் கணவரை கடத்தி 1 லட்சம் ரூபாய் கேட்ட 3 காவலர்கள் உட்பட 6 பேர் கைது! திருப்பூர் தாராபுரம் சாலையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த பவித்ரன் என்பவர் சமூக வலைதளங்கள் மூலமாக தனது மனைவியை வைத்து பாலியல் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 21ம் தேதி இரவு 11.45 மணிக்கு பெண்ணிடம் வாடிக்கையாளர் போல காவல்துறையினர் வீட்டுக்குள் சென்றனர். இதைத் தொடர்ந்து அந்த பெண்ணின் கணவர் மற்றும் செல்போன்களை எடுத்துச் சென்று அந்தப் பெண்ணிடம் 1 லட்சம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். இதைத்தொடர்ந்து அந்தப் பெண் கொடுத்த வழக்கில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர், இதைத் தொடர்ந்து சம்பவம் உறுதியானதை அடுத்து கடத்திய வழக்கில் திருப்பூர் ஆயுதப்படை காவலர்கள் கோபால்ராஜ், சோமசுந்தரம், நீலகிரி சோலூர் மட்டம் காவல் நிலைய காவலர் லட்சுமணன் மற்றும் இவர்களுக்கு உதவி செய்த ஜெயராமன், ஹரீஷ், அருண்குமார் என 6 பேரை நல்லூர் போலீசார் கைது செய்தனர். காவலர்கள் 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு மது அருந்தியவர்களை மிரட்டி பணம் பறித்த சம்பவங்கள் ஆயுதப்படை காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story