ஆம்பூர் அருகே மக்கள் தொடர்பு முகாமில் 1 கோடி 37 லட்சம் ரூபாயில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்..

ஆம்பூர் அருகே மக்கள் தொடர்பு முகாமில் 1 கோடி 37 லட்சம் ரூபாயில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்..
X
ஆம்பூர் அருகே மக்கள் தொடர்பு முகாமில் 1 கோடி 37 லட்சம் ரூபாயில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்..
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மக்கள் தொடர்பு முகாமில் 1 கோடி 37 லட்சம் ரூபாயில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்.. திருப்பத்தூர் மாவட்டம்ஆம்பூர் அடுத்த மின்னூர் கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம், ஆம்பூர் வட்டாச்சியர் ரேவதி தலைமையில் நடைப்பெற்றது, இதில், மருத்துவம், வேளாண்மை, மின்சாரத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர், இதில் 1 கோடி, 37 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்டங்களை ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், மாதனூர் ஒன்றிய தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் வழங்கினர். அப்பொழுது விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வீட்டுமனை குறித்து சிறப்பு முன்னெடுப்பு மாவட்டத்தில் நடைப்பெற்று வருகிறது, ஆம்பூர் வட்டத்தில் எங்கெல்லாம், நத்தம் பகுதியில் வீடுகள் கட்டுப்பட்டு , வீட்டு மனை பட்டா இல்லாமல் குடியிருக்கின்றார்களோ, அவர்களுக்கு ஆட்சயபனை இல்லையென்றால், தகுதி உள்ளவர்களுக்கு வீட்டு மனை பட்டா கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்க்கொண்டு வருகிறது என தெரிவித்தார்.. மேலும் இந்த நிகழ்ச்சியின் போது மின்னூர் பகுதியில் உள்ள அரசு மதுபானகடையால் அதிக தொந்தரவு இருப்பதாகவும், இதனால் மதுபான கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.. அதே போல் கணவனை இழந்து 4 பெண் குழந்தைகளுடன் வசிக்கும் பெண் ஒருவர் தனக்கு வேலைவாயப்பு வழங்க கண்ணீர் மல்க ஆட்சியரிடம் மனுஅளித்தார்.. மேலும் இந்தவிழாவில் வாணியம்பாடி வருவாய் கோட்டாச்சியர் அஜிதா பேகம் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்..ண
Next Story