பிளஸ்-1 மாணவர்களுக்கு தமிழ் இலக்கிய திறனறித் தேர்வு – செப்டம்பர் 4-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் !

பிளஸ்-1 மாணவர்களுக்கு தமிழ் இலக்கிய திறனறித் தேர்வு – செப்டம்பர் 4-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் !
X
2025-26 கல்வியாண்டுக்கான பிளஸ்-1 மாணவர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு வருகிற அக்டோபர் 19-ந்தேதி நடைபெறுகிறது.
2025-26 கல்வியாண்டுக்கான பிளஸ்-1 மாணவர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு வருகிற அக்டோபர் 19-ந்தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறும் 1,500 மாணவ-மாணவிகளுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இதில் 50% அரசு பள்ளி மாணவர்களும், மீதி அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களும் இடம்பெறுவர். 10-ம் வகுப்பு தமிழ் பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வு நடைபெறும். அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இது நடத்தப்படும். மாணவர்கள் www.dge.tn.gov.in இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது முதல்வரிடம் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 4 என மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.
Next Story