ராசிபுரத்தில் 1 கோடியே 56 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் அடிக்கல் நாட்டினார்...

ராசிபுரத்தில் 1 கோடியே 56 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் அடிக்கல் நாட்டினார்...
X
ராசிபுரத்தில் 1 கோடியே 56 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் அடிக்கல் நாட்டினார்...
திமுக ஆட்சியில் தான் பட்டியலினத்தவர்களுக்கு கூடுதல் முக்கியத்துவமும், அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் மதிவேந்தன் பேட்டி... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட மலையாம்பட்டி,வடுகம், காக்காவேரி, சிங்களாந்தபுரம், அணைபாளையம், பொன்குறிச்சி ஆகிய பகுதிகளில் அயோத்திதாசர் பாண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 56 லட்சம் மதிப்பீட்டில் காங்கிரட் சாலை, தார் சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை நிகழ்ச்சியானது நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டு பல்வேறு புதிய சாலை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்... அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், திமுக ஆட்சியில் பட்டியலினத்தவர்கள் இழிவு செய்யப்படுகின்றனர்:, ஒடுக்கப்பட்டோர் ஒதுக்கி வைக்கப்படுகின்றனர் என அதிமுக பொது குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அதற்கு பதிலளித்த ஆதிதிராவிடநலத் துறை அமைச்சர் மதிவேந்தன், ரொம்ப ரொம்ப தவறு, திமுக ஆட்சியில் தான் பட்டியலினத்தவர்கள் கூடுதல் முக்கியத்துவமும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது, பட்டியலினத்தவர்களுக்கு பிரத்தியேகமாக மிக முக்கியமாக நம்முடைய துறை சார்பாக செயல்படுத்தி வருகின்றனர். உயர்கல்வி பயில்வதற்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது, கடந்த அதிமுக ஆட்சியில் அந்த உதவித்தொகையானது 3 முதல் 5 பேர் கூட பயனடையவில்லை ஆனால் திமுக ஆட்சியில் 130-க்கும் மேற்பட்ட பட்டியலின,பழங்குடியின வகுப்பை சேர்ந்த மாணவ,மாணவிகள் 26 லட்சம் முதல் 36 லட்சம் வரை உதவித்தொகை பெற்று உயர்கல்விக்கு அயல் நாட்டிற்கு சென்றுள்ளனர். 8கோடி முதல் 15 கோடி வரை மாநகரங்களில், கார்ப்பரேட் நிறுவனத்திற்கு இணையாக விடுதிகள் கட்டப்பட்டு வருகிறது. இதையெல்லாம் அதிமுகவினர் செய்தார்களா?, திட்டங்களை செய்துவிட்டு பேசினார்கள் என்றால் பரவாயில்லை.,, பட்டியலின மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ செய்து விட்டோம்,இதற்கு மேலும் முதலமைச்சர் செய்வார். பட்டியலின மக்கள் திமுக ஆட்சிக்கு ஆதரவாக இருப்பார்கள் பட்டியலின மக்களின் வாக்குகள் உறுதியாக முதலமைச்சர் பெற்று,2026 ஆட்சி அமைப்பார், சென்னை மாநகரங்களில் தேங்கிய நீர்களை உடனடியாக அரசும் சரி திமுக நிர்வாகிகளும் சரி உடனே பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று அடிப்படை வசதிகள், முன்னேற்பாடுகள் செய்து அதனை சமூக வலைதளங்களில் வீடியோவாக பதிவிட்டனர், அதனை நாம் பார்த்தோம், அதிமுகவினர் ஆட்சியில் இருக்கும் போது என்ன செய்தார்கள்? எதிர்கட்சியாக இருக்கும் போது என்ன செய்தார்கள்?. சும்மா உட்கார்ந்து பேப்பரில் தீர்மானம் ஏற்றுவது ஈசி களத்தில் திமுக சென்று வேலை செய்வது போல், அதிமுகவினரை சென்று செய்ய சொல்லுங்கள் என ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ராசிபுரத்தில் இவ்வாறு பேட்டி அளித்தார்.. இந்த நிகழ்வில் ஒன்றிய கழகச் செயலாளர் கே.பி.ஜெகநாதன், மாணவர் அணி செயலாளர் சத்தியசீலன், மற்றும் கட்சி நிர்வாகிகள் சிவக்குமார், ரவி முத்துச்செல்வன், என நிர்வாகிகள் தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story