ஒன்றிய பகுதிகளில் சுமார் ரூ 1 கோடியே 60 லட்சம் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்*

ஒன்றிய பகுதிகளில் சுமார் ரூ 1 கோடியே 60 லட்சம் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்*
X
ஒன்றிய பகுதிகளில் சுமார் ரூ 1 கோடியே 60 லட்சம் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்*
அருப்புக்கோட்டை ஒன்றிய பகுதிகளில் சுமார் ரூ 1 கோடியே 60 லட்சம் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரம் கிராமத்தில் ரூபாய் 30 லட்சம் மதிப்பில் புதிதாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சமுதாயக்கூடம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ கலந்துகொண்டு புதிய சமுதாயக்கூடத்திற்கு அடிக்கல் நாட்டினார். மேலும் அதேபோல பாளையம்பட்டி அருந்ததியர் காலணியில் ரூ 30 லட்சம் மதிப்பில் புதிய சமுதாயக்கூடம் கட்டுவதற்கும், பாளையம்பட்டி வடக்கு தெரு பகுதியில் ரூ 27 லட்சம் மதிப்பில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுவதற்கும், உடையநாதபுரம் கிராமத்தில் ரூ 16 லட்சம் மதிப்பில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கும், பந்தல்குடி போடுரெட்டிபட்டி பகுதியில் ரூ 40 லட்சம் மதிப்பில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கும் மற்றும் வதுவார்பட்டி பகுதியில் ரூ 18 மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதற்கும் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ அடிக்கல் நாட்டினார். மேலும் பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சிகளின் போது பொதுமக்கள் அமைச்சரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினார்.‌ இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story