தளவாய்பாளையத்தில் 1 கோடியே 80 லட்சம் வாடகை நிலுவை வைத்த கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கையால் பரபரப்பு.
Karur King 24x7 |4 Dec 2024 12:17 PM GMT
தளவாய்பாளையத்தில் 1 கோடியே 80 லட்சம் வாடகை நிலுவை வைத்த கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கையால் பரபரப்பு.
தளவாய்பாளையத்தில் 1 கோடியே 80 லட்சம் வாடகை நிலுவை வைத்த கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கையால் பரபரப்பு. கரூர் அருகே தளவாபாளையம் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.இந்த கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். தளவாபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 6.33 ஏக்கர் நிலத்தை விளையாட்டு மைதானமாக இந்த கல்லூரி நிர்வாகம் பயன்படுத்தி வந்ததற்கு, 1 கோடியே 80 லட்சம் வாடகை நிலுவைத் தொகை செலுத்தாமல் கல்லூரி நிர்வாகம் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் அறநிலையத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கல்லூரியின் அசையும் சொத்துக்களை ஜப்தி செய்ய வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கல்லூரி நிர்வாகம் மாணவ- மாணவிகளை தூண்டிவிட்டு போராட்டத்தில் ஈடுபடுத்தியதாக அதிகாரிகள் குற்றம் சாட்டினார். பிரச்சனை என்னவென்று தெரியாமல் அப்பாவி மாணவ,மாணவிகளை போராட்டத்தில் ஈடுபடுத்தி உள்ளதாக டி.எஸ்.பி அப்துல் கபூர் ஒலிபெருக்கியில் அறிவுரை கூறியபோது, கல்லூரி நிர்வாகிகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கல்லூரி நிர்வாகம் கேட்டை பூட்டி வைத்து கடும் வெயிலில் மாணவ, மாணவிகளை நிறுத்தி வைத்து, சுமார் 2 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபடுத்தியதால் அதிருப்தி எழுந்தது. நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு, போலீசார் மற்றும் அதிகாரிகள் அறிவுரையை ஏற்று, மாணவ-மாணவிகள் உள்ளே அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், நீதிமன்ற உத்தரவின் பேரில் வாடகை நிலுவைத் தொகை உள்ளதால் கல்லூரி நிர்வாகத்தின் அசையும் சொத்துக்களை ஜப்தி செய்வதற்காக அறநிலையத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கல்லூரி வாயில் முன்பு காத்திருந்ததால், ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.
Next Story