சோனா கல்வி குழுமம் சார்பில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
Salem (west) King 24x7 |26 July 2024 3:15 AM GMT
எம் எல் ஏ பங்கேற்று தொடங்கி வைத்தார்
சேலம் சோனா கல்வி குழும தலைவர் வள்ளியப்பாவின் சதாபிஷேக விழாவை முன்னிட்டு சேலம் மாநகராட்சி, வனத்துறை மற்றும் சோனா கல்வி குழுமம் இணைந்து 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சேலம் அஸ்தம்பட்டி மாநகராட்சி பூங்காவில் நடந்தது. கல்லூரி தலைவர் வள்ளியப்பா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தியாகு வள்ளியப்பா முன்னிலை வகித்தார். வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு அதற்கான பராமரிப்பு பணிகள் அனைத்தும் தேசிய மாணவர் படை மற்றும் நாட்டுநலப் பணித்திட்ட மாணவர்களால் மேற்கொள்ளப்படும் என உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கார்த்திகேயன், சோனா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் காதர் நவாஸ், கவுன்சிலர் சங்கீதா நீதிவர்மன் உள்பட பலர் கலந்து கொண்டனர்
Next Story