சதுரங்க வேட்டை பட பானியில் 10 லட்சம் கொடுத்தால் அதை இரு மடங்காக தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட இரண்டு பேரை கைது செய்த தேனி போலீசார்
Periyakulam King 24x7 |15 Aug 2024 10:51 AM GMT
சதுரங்க வேட்டை
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத்த்திடம் சென்னை ஆவடியை சேர்ந்த தவச்செல்வன் தன்னிடம் 10 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் அதற்கு இரு மடங்காக பணம் தருவதாக கூறி ஏமாற்றப்பட்டதாக புகார் மனுவை அளித்திருந்தார் இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தேனி துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையில் ஆய்வாளர் உதயகுமார் உள்ளிட்ட போலீசார் நேற்று இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தபோது கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்த சேகர் பாபு மற்றும் பொம்மையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த கேசவன் ஆகியோரிடம் விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் அவர்கள் வந்த ஸ்கார்பியோ காரை சோதனை செய்ததில் அதில் 2000 ரூபாய் நோட்டு கட்டுகள் இருந்தது இதனை அடுத்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்ததில் அவர்களிடம் இருந்து மூன்று கோடி 40 லட்ச ரூபாய் போலி 2000 ரூபாய் நோட்டுகள் மற்றும் 14 லட்சம் ரூபாய் பணம் 16 செல்போன் மற்றும் 3 கார்களை பறிமுதல் செய்து தேனி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ரிசர்வ் வங்கியால் திரும்பப் பெறப்பட்ட 2000 ரூபாய் நோட்டுக்களை கொடுத்தால் அதற்கு தற்போது புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள் கொடுப்பதாகவும் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுக்களை கொடுத்தால் அதனை இரண்டு மடங்காக 2000 ரூபாய் நோட்டுக்களாக கொடுப்பதாக கூறி ஏமாற்றியுள்ளனர் மேலும் ரிசர்வ் வங்கியால் தற்போது 2000 ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டு வருவதாகவும் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை மாற்றிக் கொள்ளலாம் எனக் கூறி மோசடியில் ஈடுபட்டனர் இந்நிலையில் தவச்செல்வத்திடம் 10 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் அதனை இரண்டு மடங்காக 2000 நோட்டுகளாக திருப்பிக் கொடுப்பதாக கூறி ஏமாற்றியுள்ளனர் இதற்காக தவச்செல்வத்திடம் காரில் புதிய 2000 நோட்டுகள் இருக்கக்கூடிய புகைப்படத்தை அவருக்கு அனுப்பி அவரிடம் 10 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளனர் பின் அவரை காரில் அழைத்துச் சென்று அவரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அவரின் கைபேசியையும் பெற்றுக் கொண்டு அனுப்பியுள்ளனர் பின்னர் தவசெல்வம் அவர்களை தொடர்பு கொள்ள முயற்சிக்கும் போது அவர்களின் செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகி அவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த தவச்செல்வம் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார் இது தொடர்பாக தற்போது இரண்டு பேரை கைது செய்துள்ள தேனி போலீசார் தற்போது அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் இந்த விசாரணையில் எத்தனை நபர்களை ஏமாற்றி எவ்வளவு பணம் மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவரும் என்றும் மேலும் இந்த மோசடி யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்று விசாரணை வெளிவரும் என போலீசார் தரப்பில் தெரிவித்தனர் இந்த சம்பவம் தற்போது தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது
Next Story