என்சிசி முகாம் நடத்தி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் 10 நாட்களாக மூடப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இன்று பள்ளி திறக்கப்பட்டது
Krishnagiri King 24x7 |27 Aug 2024 11:47 AM GMT
என்சிசி முகாம் நடத்தி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் இது குறித்து சிறுமி கொடுத்த புகாரின் பேரில் பள்ளி 10 நாட்களாக மூடப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இன்று பள்ளி திறக்கப்பட்டது
பர்கூர் அருகே போலி என்சிசி முகாம் நடத்தி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் இது குறித்து சிறுமி கொடுத்த புகாரின் பேரில் பள்ளி 10 நாட்களாக மூடப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இன்று பள்ளி திறக்கப்பட்டது கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கந்தி குப்பம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளியில் கடந்த மாதம் நான்காம் தேதி முதல் 9ஆம் தேதி வரையில் போலியாக என்சிசி முகாம் நடத்தி அதில் மாணவிகளை பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் கொடூரம் செய்யப்பட்டதாக போலி என்சிசி பயிற்சியாளர் சிவராமன் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அந்த பள்ளிக்கு விடுமுறை அளித்து சிறப்புக்கு குழுவினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் 10 நாட்களுக்குப் பிறகு இன்று காலை பள்ளி திறக்கப்பட்டது பெற்றோர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் பள்ளி என்ற திறக்கப்படும் என்று பள்ளி நிர்வாகம் அறிவித்த நிலையில் பள்ளியை பல்நோக்கு குழுவின் வழிகாட்டுதல் அடிப்படையில் மேற்பார்வை குழு அமைக்கப்பட்டு அதில் 2 மாவட்ட கல்வி அலுவலர், 2 வட்டார கல்வி அலுவலர், 2 வட்டார வள ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆகியோரின் மேற்பார்வையில் பள்ளி இன்று திறக்கப்படுகிறது. இது தொடர்பாக பள்ளியில் முன்னேற்பாடாக வகுப்பறை, அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் 38 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்க உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் அமைத்த பல்நோக்கு குழு சார்பில் சம்பந்தப்பட்ட பள்ளியின் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பல்வேறு கட்ட உளவியல் ரீதியான ஆலோசனை வழங்கப்பட்ட பின்னரே இன்று பள்ளி திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் பள்ளி குறித்தான பல்வேறு கட்ட தகவல் வெளியான நிலையில் பள்ளியில் படிக்கும் சில மாணவர்களின் பெற்றோர் அவர்களது குழந்தைகளின் மாற்று சான்றிதழை பெற போவதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளன. இந்த பள்ளியின் முன்பு கடந்து சில நாட்களாக பதட்டமான சூழல் நிலவி வந்த நிலையில் தற்போது அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு அவர்களிடம் கேட்ட பொழுது பள்ளியின் புதிய நிர்வாக இயக்குனர் தேர்வு செய்து என்சிசி முகாமில் மாணவர்களிடம் பெறப்பட்ட தொகையை திருப்பி செலுத்த வேண்டியும் அதே போல புதிய பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் நியமித்து கண்காணிக்க வேண்டும் எனவும் மேலும் புகார் பெட்டி வைத்து மாணவர்களின் குறைகளை கேட்டு அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி தொடர் கண்காணிப்பில் பள்ளி இயங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் இரண்டு மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையிலான குழுவினர் ஆய்வுக்குப் பின்னர் பள்ளி செயல்படும் என்று தெரிவித்தார்
Next Story