ஆண்டிபட்டி அருகே 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா.
Andippatti King 24x7 |6 Sep 2024 11:45 AM GMT
ஆண்டிபட்டி ஒன்றிய பெருந்தலைவர் லோகிராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.
ஆண்டிபட்டி அருகே 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கோவில்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த முத்தணம்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 10.19 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இதனை ஆண்டிபட்டி ஒன்றிய பெருந்தலைவர் லோகிராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு துணைத் தலைவர் வரதராஜன், ஒன்றிய ஆணையாளர்கள் போஸ் , சரவணன்,பொறியாளர் முத்துக்கனி, ஊராட்சி மன்ற தலைவர் தங்கபாண்டி ,ஒப்பந்ததாரர் மதியரசன், அதிமுக மாவட்ட பிரதிநிதி கவிராஜன் உள்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர் .நிகழ்ச்சியை முன்னிட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
Next Story