எஸ்.யு.வனம், சிறுமூர் ஏரிக்கரைகளில் 10ஆயிரம் பனை விதைகள் நடும் விழா.

எஸ்.யு.வனம், சிறுமூர் ஏரிக்கரைகளில் 10ஆயிரம் பனை விதைகள் நடும் விழா.
ஆரணி, செப் 23. ஆரணி அடுத்த எஸ்.யு.வனம் மற்றும் சிறுமூர் கிராமங்களின் ஏரிக்கரைகளில் எம். ஐ அகர சிலம்பம் டிரஸ்ட் சார்பில் 10 ஆயிரம் பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது.
ஆரணி அடுத்த எஸ்.யு.வனம் மற்றும் சிறுமூர் கிராமங்களின் ஏரிக்கரைகளில் எம். ஐ அகர சிலம்பம் டிரஸ்ட் சார்பில் 10 ஆயிரம் பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது. இதில் வருவாய் கோட்ட அலுவலர் எஸ். பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன், வட்டாட்சியர் கௌரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் எம்.ஐ.அகர சிலம்பம் டிரஸ்ட் நிர்வாகி தனகோட்டி வரவேற்றார். மேலும் இதில் மண்டல துணை வட்டாட்சியர் தேவி, கால்நடை மருத்துவர் கிருஷ்ணகுமார், முள்ளண்டிரம் அரசுப்பள்ளி தலைமையாசிரியர்(பொறுப்பு) இளையராஜா, சிறுமூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பிச்சாண்டி, எஸ்.யு.வனம் முன்னாள் கவுன்சிலர் குமரன், எஸ்.யு.வனம் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் எஸ்.ஜானகிராமன், கே.சத்தியமூர்த்தி, முள்ளிப்பட்டு சமூக ஆர்வலர் எம்.இ.பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். எஸ்.யு.வனம், சிறுமூர் ஏரிக்கரைகளில் வருவாய் கோட்ட அலுவலர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோருடன் மாணவர்கள் சேர்ந்து பனை விதைகளை நட்டனர். ஏற்பாடுகளை எம்.ஐ அகர சிலம்பம் டிரஸ்ட் நிர்வாகி தனகோட்டி செய்திருந்தார்.
Next Story