நாமக்கல்லில் வருகிற நவம்பர் 10இல் பாரதீய கிசான் மாவட்ட மாநாடு!

இந்த நிகழ்வில் பாரதீய கிசான் சங்க உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
பாரதீய கிசான் சங்கம் கலந்தாய்வு கூட்டம் நாமக்கல் உழவர் சந்தை அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணி அனைவரையும் வரவேற்று பேசினார்.மாவட்ட தலைவர் வேலுச்சாமி கூட்டத்தில் கலந்து கொண்டு தலைமை உரை ஆற்றினார்.கூட்டத்தில் வருகிற நவம்பர் மாதம் 10ஆம் தேதி நாமக்கல்லில் பாரதீய கிசான் மாவட்ட மாநாடு வெகு விமரிசையாக நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது. மேலும்,இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் இயற்கை விவசாயம், விவசாய பொருட்களை மதிப்பு கூட்டு முறையில் சந்தைப்படுத்தல், மத்திய மாநில அரசுகள் கொண்டு வரும் திட்டங்களை எடுத்துரைத்தல், மற்றும் விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை தகுந்த வேளாண் வல்லுனர்கள் மூலமாக வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கோட்ட பொறுப்பாளர்கள் நமச்சிவாயம், டாக்டர் நித்தியசார்வனந்தா, ரவிச்சந்திரன்,பத்மராஜ், செல்வராசு, சரவணன், நடராஜன், தனபாலன், பொன்னுசாமி , ஸ்ரீதரன், பன்னீர்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் பூபேஷ்குமார் நன்றி கூறினார்.
Next Story