சிவன்மலை கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா சுப்பிரமணியர் நான்கு வீதிகளில் சூரனை வதம் செய்தார் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Kangeyam King 24x7 |8 Nov 2024 11:14 AM GMT
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலில் இன்று நடைபெற்ற கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழாவையொட்டி முருகபெருமான் நான்கு வீதிகளில் வலம் வந்து சூரனை வதம் செய்தார் இதில் பல 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
காங்கேயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிசாமி கோவிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார திருவிழா கடந்த 2 ம் தேதி துவங்கியது. அன்று மதியம் 2 மணிக்கு சாமி மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவிலுக்கு எழுந்தருளினார். இதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினார்கள். தினமும் காலை 10 மணிக்கும் மாலை 4.30 மணிக்கும் அபிஷேக ஆராதனையும் திருவுலா காட்சியும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரவிழா நேற்று மாலை தொடங்கி இரவு முடிவடைந்தது. மலை அடிவாரத்தில் உள்ள பாதவிநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது தொடர்ந்து பல்லக்கில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இரவு 7.50 மணியளவில் சுப்பிரமணியர் போருக்கு புறப்பட்டார். உடன் வீரபாகு சாமியும் போரிட்டார். தொடர்ந்து அடிவாரத்தில் உள்ள நான்கு வீதிகளிலும் போரிட்டுசூர கஜமுகாசூரன்,சிங்கமுகாசூரன்,பானுகோபன்,தாரகாசூரன் தலையை கொய்தார் அப்போது ஏராளமான பகதர்கள் கூடி நின்று அரோகரா கோஷம் போட்டனர். நாளை சுவாமி திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. நாளை மறுநாள் மஞ்சள் நீராட்டு விழாவை தொடர்ந்து சுவாமி திருமலைக்கு எழுந்தருளுகிறார். விழா ஏற்ப்பாடுகளை கோவில் உதவி ஆணையர் உதவி ஆணையர் இரத்தினாம்பாள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர். பாதுகாப்பு பணியில் காங்கேயம் டிஎஸ்பி மாயவன் தலைமையில் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்விழாவில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Next Story