கரூரில், மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 10வது கரூர் மாவட்ட மாநாடு நடைபெற்றது.

கரூரில், மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 10வது கரூர் மாவட்ட மாநாடு நடைபெற்றது.
கரூரில், மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 10வது கரூர் மாவட்ட மாநாடு நடைபெற்றது. கரூரில், வாழும் சமுதாய மக்களுக்கு எதிரான சீர்கேடுகளை கலைந்திட தொடர்ந்து களப் போராட்டம் நடத்தி வரும் மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பத்தாவது மாவட்ட மாநாடு கரூர் பேருந்து நிலையம் அருகாமையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று மாநில செயற்குழு உறுப்பினர் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிபிஐ மாவட்ட செயலாளர் ஜோதிபாசு, மாநில குழு உறுப்பினர் ரத்தினவேலு, மாநகர செயலாளரும், 41 வது வார்டு மாமன்ற உறுப்பினருமான தண்டபாணி உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர். இந்த மாநாட்டில் மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல், மாநில குழு உறுப்பினர்கள் பாலா, ராதிகா ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேலும், மாநாட்டின் நோக்கம், கட்சியின் எதிர்கால நடவடிக்கை, அடுத்து நடத்த உள்ள போராட்டங்கள் குறித்து இன்று மாலை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story