கண்டமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி வயல் வெளியில் மேய்ந்த 10 ஆடுகள் இறந்தன.

X
விழுப்புரம் மாவட்டம்,கண்டமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி வயல் வெளியில் மேய்ந்த 10 ஆடுகள் இறந்தன.கண்டங்கலம் அடுத்த பூஞ்சோலைக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் தங்களுக்கு சொந்தமான ஆடு, மாடுகளை நேற்று முன்தினம் சங்கராபரணி ஆற்றங்கரையில் மேய்த்தனர்.பிற்பகல் 3;00 மணியளவில் மழை பெய்ததால் ஆடு, மாடுகள் மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மரத்தடியில் ஒதுங்கி நின்றனர்.ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்த நிலத்தின் வழியே சென்ற மின்சார் தொடரில் ஒரு மின்கம்பி அறுந்து விழுந்தது.இதில், மாயக்கண்ணன் என்பவருக்குச் சொந்தமான 8 ஆடுகள், குணசேகரன் மற்றும் அஞ்சலை ஆகியோருக்குச் சொந்தமான தலா 1 ஆடு என மொத்தம் 10 ஆடுகள் இறந்தன.வி.ஏ.ஓ., காஞ்சனா மற்றும் மின்துறைக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் மின் கம்பியை சீரமைத்தனர்.
Next Story

