வெறிநாய் கடித்து 10 பேர் காயம் பொதுமக்கள் அவதி
Dharmapuri King 24x7 |22 Dec 2024 1:11 AM GMT
பாப்பிரெட்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகம் பகுதியில், வருவாய் ஆய்வாளர் உட்பட 10 நபர்கள் வெறி நாய் கடித்து பாதிப்பு
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆதார் எடுக்க வந்த கடத்தூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, அலுவலகத்தில் பணியாற்றும் வருவாய் ஆய்வாளர் சதீஷ் உள்ளிட்ட 10 பேரை அப்பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று கடித்தது. இதனை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் பத்து பேர் தெரிந்து பாதிக்கப்பட்டதாகவும் மற்றும் தினசரி பலரை வெறிநாய் கடிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். வெறிநாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Next Story