பள்ளிக்கூடம் செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை
Tiruppur King 24x7 |22 Dec 2024 12:16 PM GMT
பள்ளிக்கூடம் செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை காவல்துறை விசாரணை
பள்ளிக்கூடம் செல்லாததை பெற்றோர் கண்டிருந்தால் பத்தாம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். உளுந்தூர்பேட்டை சேர்ந்தவர் சிவனேசன் இவரது மனைவி செல்வி இவர்களுக்கு தவசி, சூர்யா என்கிற இரு மகன்களும் சிவானி என்கிற 15 வயது மகளும் உள்ளனர். சிவனேசன் தம்பதியினர் கடந்த சில வருடங்களாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் கொசவம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டு அங்குள்ள குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். ஷிவானி பல்லடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இதற்கிடையே சிவானி சரிவர படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்ததாக தெரிகிறது. இதனை குடும்பத்தினர் கண்டித்து வந்தனர். நேற்று சிவானி பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அவர் தாயார் செல்வி கண்டித்துள்ளார். பள்ளிக்குச் செல்லாமல் லீவு போட்டு இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய் என சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் வேலைக்கு சென்று விட்டார். உணவு இடைவேளைக்கு வீடு திரும்பிய போது சிவானி வீட்டில் தூக்கு போட்டு தூங்குவதைக் கண்டு அலரி துடித்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பின்னர் சிவனியை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து பல்லடம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர் திட்டியதால் 10-ம் வகுப்பு மாணவிகளுக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
Next Story