மயிலம் அருகே தனியார் பஸ் டயர் வெடித்து விபத்து: 10 பேர் காயம்

X
விழுப்புரத்தில் இருந்து திண்டிவனத்திற்கு நேற்று மதியம் 3:10 மணிக்கு தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 37 பேர் பயணம் செய்தனர்.பஸ்சை விக்கிரவாண்டி அடுத்த சி.என்.பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் ஓட்டினார். மதியம் கூட்டேரிப்பட்டு அடுத்துள்ள கன்னிகாபுரம் கிராமம் அருகே பஸ்ஸின் முன்பக்க வலது டயர் திடீரென வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் ஏறி, எதிர் திசையில் உள்ள கடையின் சுவற்றின் மீது மோதி நின்றது.இந்த விபத்தில் முண்டியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த அசோக் என்பவரின் மனைவி செல்வராணி 51; அசோகபுரி முரளி மனைவி வனிதா 30; விழுப்புரம் சாலமேடு ஜெயச்சந்திரன் 60; மயிலம் அடுத்த ஆலகிராமம் சீனிவாசன் 50; உட்பட உட்பட 10 பேர் காயமடைந்தனர்.காயமடைந்தவர்கள் தென்பசாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story

