குண்டவெளி செல்லியம்மன் கோவிலில் காத்திருப்பு போராட்டம். வாக்களிக்க மாட்டோம் 10 கிராம மக்கள் திட்டவட்டம்.

குண்டவெளி செல்லியம்மன் கோவிலில் காத்திருப்பு போராட்டம். வாக்களிக்க மாட்டோம் 10 கிராம மக்கள் திட்டவட்டம்.
குண்டவெளி கிராமம் செல்லியம்மன் கோவில் கல்லாத்தூர் -மீன்சுருட்டி சாலையை மாநில நெடுஞ்சாலையாக மாற்றி சாலையை செப்பனிட வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 10 கிராம மக்கள் ஒன்று கூடி நாங்கள் யாருக்கும் வாக்களிக்க மாட்டோம் என திட்டவட்டமாக தெரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
அரியலூர், ஜன.8- மீன்சுருட்டி அருகே சாலை வசதி கேட்டு 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மறியல் போராட்டத்திற்கு திரண்டனர். போலீசார் அவர்களுக்கு அனுமதி மறுத்த நிலையில், குண்டவெளி செல்லியம்மன் கோவிலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் கல்லாத்தூர் -மீன்சுருட்டி சாலையை மாநில நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தி சாலை அமைக்காததால்  நாங்கள் யாருக்கும் வாக்களிக்க மாட்டோம் என 10 கிராம மக்கள் திட்டவட்டமாக தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டியில் இருந்து கல்லாதூர் வரை மாநில நெடுஞ்சாலையாக அறிவித்து புதிய தார் சாலை வசதி வேண்டும் என இப்பகுதி மக்கள் மற்றும் சாலை மீட்பு குழுவினர் நீண்ட நாட்களாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே கோரிக்கையை வலியுறுத்தி, இருசக்கர வாகன பேரணி, உண்ணாவிரத போராட்டம், கிராமங்களில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம், ஆர்ப்பாட்டம், துண்டு பிரசுரம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், தமிழக முதல்வர் வரை மனுக்கள் அளித்தும் இதுவரை புதிய தார் சாலை அமைப்பதற்கு தமிழக அரசு  எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் கடும் அதிருப்தியில் இருந்த பொதுமக்கள் மீன்சுருட்டி கடைவீதியில் மக்களை திரட்டி ஜனவரி  8-ம் தேதி மறியல் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்தனர். அந்த அறிவிப்பை தொடர்ந்து உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கு பொதுமக்கள் தரப்பை அதிகாரிகள் அழைத்து இருந்தனர். அதன்படி நேற்று முன்தினம் சாலை மேட்டூர் குழுவினர் உடையார்பாளையம் ஆர்டிஓ அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தைக்கு சென்றனர். ஆனால் ஆர்டிஓ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று விட்டதால், பேச்சுவார்த்தைக்கு நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்தோடு திரும்பி வந்து விட்டனர். இதில் அதிருப்தி அடைந்த சாலை மீட்பு குழுவினர் திட்டமிட்டபடி மீன்சுருட்டியில் மக்களை திரட்டி மறியல் போராட்டம் நடைபெறுவது உறுதி என அறிவித்திருந்தனர்.  இந்த நிலையில் நேற்று திட்டமிட்டபடி சாலை மீட்பு குழுவினர் மற்றும்  மீன்சுருட்டி, வெத்தியார்வெட்டு, ஆலத்திபள்ளம், சத்திரம் உள்ளிட்ட 5 ஊர் கிராம மக்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு மறியல் போராட்டம் நடத்துவதற்கு ஆயத்த நிலையில் இருந்தனர். அப்போது ஜெயங்கொண்டம் துணை சூப்பிரண்டு சீராளன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மாவட்ட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உங்களது கோரிக்கை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எனவே மறியல் போராட்டத்தை கைவிடுங்கள் எனக் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து பொதுமக்கள் மற்றும் சாலை மீட்பு குழுவினர் மறியல் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு, அங்கிருந்து குண்டவெளி செல்லியம்மன் கோவிலில்  அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்காக பொதுமக்கள் காத்திருந்தனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அதிகாரிகள் யாரும் வராததால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரியலூர் மாவட்ட ஆட்சியர் வருகை தந்து மக்களிடத்தில் பேச்சு வார்த்தை நடத்தி,  உடனடியாக தார் சாலை அமைப்பதற்கு உண்டான அறிவிப்பை அறிவிக்க வேண்டும் என கோஷமிட்டுட்டனர். இதனால் அங்கு பெரும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இதில் செய்வதறியாத போலீசார் மாலை வரை பல்வேறு பேச்சுவார்த்தை நடத்தியும், எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. பொதுமக்கள் தங்களது போராட்டத்தில் உறுதியாக இருந்து அற வழியில் நடத்தி வந்தனர்.  பின்னர் மாலை 4 மணி அளவில் உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஸ்ரீஜா தலைமையிலான வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் மீன்சுருட்டியில் இருந்து கல்லாதூர் வரை ஓடிஆர் திட்டத்தில் புதிய தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக உத்திரவாதம் தந்தனர். இதையடுத்து காத்திருப்பு போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு அப்பகுதி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்கள் மறியல் போராட்டம் காரணமாக மீன்சுருட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.  பின்னர் இது குறித்து சாலை மீட்பு குழு தலைவர் கு. பாலசுப்பிரமணியன் தெரிவிக்கையில் மீன்சுருட்டியில் இருந்து கல்லாத்தூர் வரை மாநில நெடுஞ்சாலையாக அறிவித்து புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம் ஆனால் அது மறுக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள கிராமங்களுக்கு மாநில நெடுஞ்சாலையில் சாலை போடப்பட்டுள்ளது. ஆனால் மிகவும் முக்கியசாலையாக உள்ள இந்த சாலையை மாநில சாலை திட்டத்தில் சாலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் தற்போது ஓ.டி.ஆர் திட்டத்தில் சாலை பணிகள் போடுவதாக உத்தரவாதம் வந்துள்ளனர். இது எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. எங்களது போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி உள்ளோம். மேலும் இது பற்றி நன்கு கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட அறிவிப்பை வெளியிடுவோம் என்றார். மேலும் மேலும் கல்லாத்தூர் -மீன்சுருட்டி சாலையை மாநில நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தி சாலை அமைக்காததால் நாங்கள் யாருக்கும் வாக்களிக்க மாட்டோம் என 10 கிராம மக்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். இச்சம்பவம் மீன்சுருட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது .
Next Story