கல்லாத்தூர் மீன்சுருட்டி சாலையை மாநில நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தி சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்டமன்றத் தேர்தலில் 10 கிராம மக்கள் வாக்களிக்க மாட்டோம்.
Ariyalur King 24x7 |8 Jan 2025 2:23 PM GMT
ஜெயங்கொண்டம் கல்லாத்தூர் மீன்சுருட்டி சாலையை மாநில நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தி சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் 10 கிராம மக்கள் வாக்களிக்க மாட்டோம் என கிராம மக்கள் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது..
அரியலூர், ஜன.8- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டியில் இருந்து கல்லாத்தூர் வரையிலான சாலை நடந்து கூட போக முடியாத அளவிற்கு கடந்த சில ஆண்டுகளாக மிக மோசமாக இருந்து வருகிறது எனவே இச்சாலையை மாநில நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தி புதிய சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சாலை மீட்பு குழுவினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர் ஆனால் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்நிலையில் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கிராம மக்களை ஒன்று திரட்டி இன்று சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என சாலை மீட்பு குழுவின் அறிவித்தனர் இதனையடுத்து இன்று சாலை மறியல் போராட்டத்தில் அப்பகுதி சேர்ந்த மீன்சுருட்டி, வெத்தியார்வெட்டு, ஆலத்திபள்ளம், சத்திரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 500 -க்கும் மேற்பட்டோர் ஈடுபட முயற்சித்தனர் அப்போது சாலை மீட்புக் குழுவினர் மற்றும் பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிட வலியுறுத்தினர். இதனையடுத்து அதிகாரிகள் வந்து எங்களுக்கு உத்தரவாதம் தரும் வரை எங்களது போராட்டம் அறவழி போராட்டமாக இருக்கும் எனக் கூறி காத்திருக்கும் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர் இதனையடுத்து மாலை உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஷீஜா தலைமையிலான வருவாய்த்துறை மற்றும் போலீசார் மீன்சுருட்டியில் இருந்து கல்லாத்தூர் வரை ஓடிஆர் திட்டத்தில் புதிய தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக உத்திரவாதம் தந்தனர். இதையடுத்து காத்திருப்பு போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு அப்பகுதி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டம் காத்திருக்கும் போராட்டத்தினால் காலை முதல் மாலை வரை மீன்சுருட்டி பகுதியில் பதற்றமான சூழல் காணப்பட்டது இது குறித்து சாலை மீட்பு குழு தலைவர் பாலசுப்பிரமணியம் கூறும்போது எங்களது கோரிக்கையான மீன்சுருட்டி கல்லாத்தூர் சாலையை மாநில நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தி சாலை அமைக்க வேண்டும் தமிழ்நாடு அரசு இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காவிட்டால் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் இப்பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வாக்களிக்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர்.மேலும் போராட்டத்திற்கு வந்திருந்த அனைவரும் அவரவர்கள் ஊர்களை வேறுபடுத்தும் விதமாக கலர் துண்டுகள் அணிந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story