ஓசூர் நீதிமன்றத்திற்கு துப்பாக்கிகளுடன் வந்த 10 பேர் கைது.
Krishnagiri King 24x7 |10 Jan 2025 4:12 AM GMT
ஓசூர் நீதிமன்றத்திற்கு துப்பாக்கிகளுடன் வந்த 10 பேர் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கொளதாசபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ம் கர்நாடக மாநிலம் சூளகுண்டாவைச் சேர்ந்த ரேவந்த்குமார் என்பவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் உள்ள கொலையாளிகள் 5 பேர் நேற்று ஓசூர் நீதிமன்றத்தில் கையெழுத்திட வந்த போது அவர்களின் பாதுகாப்புக்காக துப்பாக்கிகளுடன் 5 பேர் வந்ததால் அவர்கள் 10 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story