ஆபாச வீடியோ பதிவேற்றி 10 லட்சம் கேட்டு மிரட்டிய அர்ச்சகர் கைது
Nagercoil King 24x7 |18 Jan 2025 12:07 PM GMT
நாகர்கோவில்
குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள களியங்காடு பகுதியை சேர்ந்த ஈசானசிவம் என்ற ராஜா (34) என்பவர் கோயில்களில் கும்பாபிஷேகம் பூஜை பணிகளை செய்து வருகிறார். இவரும் நாகர்கோவில் தட்டான் விளை பகுதி சேர்ந்த 42 வயது நபர் ஒருவரும் நண்பர்கள். ஈசான சிவம் அந்த நபரிடம் 10 லட்சம் கடன் கேட்டுள்ளார். பணம் இல்லை என்று சொன்னதால் பின்னர் இருவரும் பேசுவதில்லை. இந்த நிலையில் திடீரென ஈசானசிவத்தின் நண்பர் என கூறி கோலப்பன் (53) என்பவர் தொடர்பு கொண்டு ஈசானசிவம் உங்களிடம் பேச வேண்டும் என கூறி கோட்டாரில் உள்ள ஒரு வீட்டிற்கு வாலிபரை அழைத்தார். அப்போது அளவுக்கு அதிகமாக மது கொடுத்தால் போதை தெளிக்கேறியது. அதன் பிறகு அங்கு என்ன நடந்தது என்பதை தெரியவில்லை. சில நாட்கள் கழித்து ஈசானசிவம், கோலப்பன் இவருவரும் அந்த நபர் ஒரு பெண்ணுடன் இருக்கும் வீடியோவை காண்பித்து ரூ. 10 லட்சம் தரவிட்டால் இந்த வீடியோவை வெளியிட்டு விடுவேன் என்று கூறி மிரட்டி சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க குமரி சைபர் கிரைமில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சொர்ண ராணி விசாரணத்தி ஈசான சிவம் மற்றும் கோலப்பன் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் ஈசான சிவம் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story