குமரி : 10 கிலோ சந்தன கட்டையுடன் ஒருவர் கைது
Nagercoil King 24x7 |22 Jan 2025 10:54 AM GMT
வேளிமலை
குமரி மாவட்டம் வேளிமலை வனச்சரகம், வேளிமலை தெற்கு பகுதியில் நேற்று மாலை வானத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, ஞானதாசபுரம் கால்வாய் கரையோரம் ஒருவர் பையை சுமந்து கொண்டு வந்தார். ரோந்து பணியில் இருந்த பணியாளர்கள் அவரை பிடித்து நிறுத்தி, பையில் என்ன இருக்கிறது என்று கேட்டபோது பையில் விறகு எடுத்துச் செல்வதாக கூறினார். பையை திறந்து பார்த்தபோது, பையில் சந்தனக் கட்டைகள் இருந்தது தெரியவந்தது. அவரை உடனடியாக பிடித்து எங்கிருந்து இதனை எடுத்து வந்தார் என விசாரணை செய்த போது, எவ்வித அனுமதியும் இல்லாமல் திருட்டுத்தனமாக எடுத்து வந்த குற்றத்திற்காக அவர் மீது, சந்தன மரக் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. பிடிபட்ட எதிரியையும், பிடிபொருட்களையும் சரக அலுவலகம் கொண்டு வந்து தொடர்விசாரனை நடத்தப்பட்டது. விசாரணையில் சுமார் 3 லட்சம் மதிப்பிலான 10 கிலோ சந்தனக்கட்டைகளை பறிமுதல் செய்து, துவரங்காடு பகுதியைச் சேர்ந்த அருண் (39) என்பவரை கைது செய்தனர்.
Next Story