இயற்கை உழவர்கள் குழு மூலம் "சிவப்பு நிற மக்காச்சோளம் விதை வழங்குதல் மற்றும் 10 வகை சுரைக்காய் கண்காட்சி
பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் உழவர் ராஜா வயலில் பெரம்பலூர் மாவட்ட இயற்கை உழவர்கள் குழு மூலம் "சிவப்பு நிற மக்காச்சோளம் விதை வழங்குதல் மற்றும் 10 வகை சுரைக்காய் பார்வையிடும்" நிகழ்வு நடைபெற்றது. நிகழ்விற்கு வருகை தந்தவர்களை ராமு ஆல் தி சில்ரன் அறக்கட்டளை பொறுப்பாளர் வரவேற்றார். இயற்கை வழி வேளாண்மை முறையில் சிவப்பு மக்காச்சோளம் மற்றும் சுரைக்காய் சாகுபடி செய்த உழவர் ராஜா முன்னோடி உழவர்கள் ஆடை போற்றி சிறப்பு செய்யப்பட்டது. எவ்வாறு சாகுபடி செய்தேன் என்பதை ராஜா பகிர்ந்து கொண்டார். அதனை தொடர்ந்து முன்னோடி உழவர் ஆறுமுகம் பேசுகையில் இன்றையச் சூழலில் உழவர்கள் இயற்கை வழி வேளாண்மை முறையில் பயிர்கள் உற்பத்தி செய்துவிடுகிறார்கள் அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல நாம் உணவுப்பொருள், வேற எந்த மதிப்பும் கூட்டல் முறையில் கொடுக்கமுடியுமோ அவ்வாறு தரும் போது அது போதுமான வருவாயை கண்டிப்பாக தரும், நாம் உற்பத்தி செய்யும் பொருட்களை நமக்குள் கலந்து கொள்வது மிகவும் அவசியம், சிவப்புநிற மக்காச்சோளம் செய்த திரு. ராஜா அவர்களை பாராட்டினார். அதனை தொடர்ந்து மணி பேசுகையில் இயற்கை உழவர்கள் தொடர்ந்து இது போன்ற நிகழ்வுகளை நடத்தி தங்கள் தெரிந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளும்வதன் மூலமாக உற்பத்தி செய்யும் பொருட்களை எளிதாக விற்பனை செய்ய முடியும் ஆகையால் நாம் ஒவ்வொரு மாதமும் ஒன்று கூடுவோம், உழவர் ராஜா சிவப்பு மக்காச்சோளம் மற்றும் சுரைக்காய் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்டது உள்ளபடியே மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். நொச்சியம் பகுதியில் இயற்கை வேளாண்மை செய்து வருகின்ற உழவர் செல்வராஜ் பூனைக்காலி பயிர் உற்பத்தி செய்து விற்பனை செய்துவருவதையும் அதன் பயன்கள் குறித்தும் விளக்கினார். சிவப்பு நிற மக்காச்சோளம் தொடர்ந்து சாகுபடி செய்தும் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ஆந்திரா பகுதியில் உள்ள உழவர்களுக்கு வழங்கி அவர்களுக்கான விளக்கம் கொடுத்தும் வருகிற பொறியாளர் ஜோதிவேல் சிவப்பு நிற மக்காச்சோளம் அடிப்படை முதல் விற்பனை மதிப்பு கூட்டுதல் வரை விளக்கம் வழங்கினார். ஐந்து அடுக்கு முறையில் இயற்கை வழி வேளாண்மை செய்து வருகின்ற எளம்பலூர் பகுதியை சேர்ந்த உழவர் துளசி நான் இதனை செய்யும் சற்று தயக்கமாக இருந்தது இன்று தொடர்ந்து எனக்கு பப்பாளி, வாழை, காய்கறி, முருங்கை மூலமாக வருவாய் கிடைத்து வருகிறது ஆகையால் இயற்கை வழி வேளாண்மை செய்பவர்கள் பயம் இன்றி செய்யலாம். மருதடி ஈச்சங்காடு பகுதியில் உள்ள உழவர் ஞானசேகரன் மனைவி அவர்கள் கூறுகையில் நாட்டுகோழிகள் வளர்த்து நேரடியாக முட்டை, கோழிகள், அசோலா உற்பத்தி செய்து வரும் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். மேலும் நிகழ்வில் உழவர்கள் செல்லதுரை, சுந்தராஜன், நம்பியப்பன், அருமை செல்வம், ராஜா ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். நிகழ்வினை ஒருங்கிணைந்த உழவர் போதிபகவன் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற உள்ள இயற்கை உழவர்கள் உணவு பாதுகாப்பு மாநாடு குறித்து, மாதம் ஒருமுறை இயற்கை சந்தை நடத்துவதும் பற்றியும் தகவல் பகிர்ந்து கொண்டார். நிகழ்வில் கலந்து கொண்டவருக்கு சுரைக்காய் செய்த வடை மற்றும் மாப்பிள்ளை சம்பா அரிசி செய்த கஞ்சி கூழ் வழங்கப்பட்டது. கலந்தகொண்டவருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
Next Story













