கார்கள் மோதிக்கொண்டு மணமகள்- மணமகன் உள்பட 10 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
திருத்தணி அருகே சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு மூன்று கார்கள் மற்றும் எதிர் திசையில் திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று திருமணம் நடைபெற்ற மணப்பெண் மணமகள் உள்பட அவர்கள் வந்த கார் எதிர் திசையில் மூன்று கார்களுடன் மோதி 4-கார்கள் சேதம் மணமகள்- மணமகன் உள்பட 10 பேர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிடம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் டி.வி.புரம் என்ற பகுதியில் தனியார் ஓட்டல் சாப்பிடுவதற்காக தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் கார்களை பச்சைக் கொடி காட்டி அந்த ஓட்டல் ஊழியர் அழைத்துக் கொண்டிருந்தார் அப்போது திருத்தணியில் இருந்து சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று திருப்பதியில் திருமணம் நடைபெற்ற பின்பு சாமி தரிசனத்திற்கு வந்துவிட்டு திருப்பதி சென்று கொண்டிருந்த மணமகள் சுஷ்மிதா- மற்றும் மணமகன்-சுரேஷ் வீட்டார் தங்கள் காரில் இதனை கடந்து செல்லும் பொழுது எதிர்திசையில் வந்த போது எதிர் திசையில் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த ஹரி என்பவரது குடும்பத்தார் ஐந்து பேர் வந்த கார் மீது மோதியது இதனால் பின்னால் வந்த ரமேஷ் என்பவரது திருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு வந்த காருடன் மோதியது அதற்கு பின்னால் வந்த அதற்கு பின்னால் வந்த மூன்றாவது கார் முத்து என்பவர் சென்னை நோக்கி திருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு வந்த கார் பின்புறம் மோதியது இந்த வண்டியில் வந்த மென்பொருள் பொறியாளர் சக்னி குடும்பத்துடன் திருப்பதி சாமி தரிசனம் செய்து விட்டு வந்தவர் அவரது காரும் இந்த விபத்தில் பின்புறம் மோதியதில் இவரது தாய் மனைவி உள்பட ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர் இதனால் முதல் கார் முன்பக்கம் மேதிய திருப்பதி நோக்கிச் சென்ற திருமண வீட்டார்கோஷ்டி காரில் வந்த ஐந்து பேர் சென்னை சேர்ந்த பொறியாளர் குடும்பத்தார் ஐந்து பேர் என அனைவரும் படுகாயம் அடைந்தனர் படுகாயம் அடைந்த 10 பேரும் திருத்தணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்தின் காரணமாக 30 நிமிடம் இந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது மேலும் இரண்டு கார்களில் வந்தவர்கள் சிறிய காயங்களுடன் விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு வந்தவர்கள் திருத்தணியில் இருந்து சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று திருமணம் நடந்த தம்பதிகள் ஆகியோர்கள் விபத்தில் சிக்கிய இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது சம்பவம் குறித்து திருத்தணி போலீசார் விசாரணை தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள ஓட்டல்களில் சாப்பிடுவதற்காக இவர்கள் பச்சைக் கொடியை காட்டி விசில் அடித்து தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களின் கவனத்தை திசை திருப்புவதால் ஏற்பட்ட பெரும் விபத்து என்று காரில் வந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்கள் தெரிவித்துள்ளனர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஓட்டல்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று இதற்கு திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் முன் வரவேண்டும் என்று விபத்தில் சிக்கி அவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை முன்வைத்தனர்.
Next Story









