வெள்ளகோவிலில் தெரு நாய்கள் கடித்து 10 ஆடுகள் பலி

வெள்ளகோவிலில் தெரு நாய்கள் கடித்து 10 ஆடுகள் பலி
X
வெள்ளகோவிலில் தெரு நாய்கள் கடித்து 10 ஆடுகள் பலி தொடர்கதையாகும் விவசாயிகளின் வேதனை
வெள்ளகோவில் வேலப்பன் நாயக்கன்வலசு சக்திபாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி திருநாவுக்கரசு மகன் அபி நந்தகுமார் (வயது 32). இவர் தனக்கு சொந்தமான விவசாய பூமியில் 20 செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை ஆடுகளை தோட்டத்தின் ஒரு பகுதியில் உள்ள கம்பிவேலி பட்டிக்குள் அடைத்து வைத் துவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று காலை மீண்டும் சென்று பார்த்த போது நாய்களால் கடிபட்ட காயங்களுடன் 10 ஆடுகள் இறந்து கிடந்தன.3 ஆடுகள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. இதுகுறித்து அறிந்ததும் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் திரண்டனர். அவர்கள் இறந்து கிடந்த ஆடுகளை வேதனையுடன் பார்வையிட்ட னர். இப்பகுதியில் கடந்த 5 நாட்களில் நாய்கள் கடித்து 25 ஆடுகள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், வெள்ளகோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நாய்கள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் இரவு நேரங்களில் பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்துக் கொன்றுவிடுகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டு பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதன் காரணமாக விவசாயிகளின் வேதனை தொடர் கதையாகி வருகிறது. இதற்கு எப்போது தான் தீர்வு கிடைக்குமோ? என்று புலம்பினர்.
Next Story