அம்மா - மகன் பங்கேற்ற 10 கிலோமீட்டர் நெடுந்தூர ஓட்டம் - நெடுந்தூர ஓட்டத்தில் கைக்குழந்தையுடன் பங்கேற்று ஓடிய அம்மா....*

X
விருதுநகரில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட அம்மா - மகன் பங்கேற்ற 10 கிலோமீட்டர் நெடுந்தூர ஓட்டம் - நெடுந்தூர ஓட்டத்தில் கைக்குழந்தையுடன் பங்கேற்று ஓடிய அம்மா.... மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம் இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தமிழகத்திலும் தமிழக அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதனை முன்னிட்டு இன்று விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட அம்மா - மகன் பங்கேற்ற 10 கிலோ மீட்டருக்கான நெடுந்தூர ஓட்டப் பந்தயத்தை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஒட்ட பந்தயத்தில் அம்மாவுடன் கை குழந்தையிலிருந்து பள்ளி மாணவர்கள் வரை கலந்து கொண்டனர் இந்த நெடுந்தூர ஒட்டப்பந்தயமானது விருதுநகர் - திருநெல்வேலி சாலையில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தொடங்கி தேசிய நெடுஞ்சாலை மற்றும் முக்கிய சாலை வழியாக சென்று மீண்டும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் முடிவடைந்தது. இந்த நெடுந்தூர ஒட்டப்பந்தயத்தில் தைக்குழந்தையுடன் பங்கேற்ற அம்மா தனது மகனை இடுப்பில் வைத்துக் கொண்டு ஓடியது பார்ப்பவர்களின் மனதை நெகிழ வைத்தது இந்த நெடுந்தூர ஒட்ட பந்தயத்தில் முதல் 5 இடங்களைப் பிடித்த அம்மா - மகனுக்கு தலா ரூ30000 , ரூ25000 ,20,000, 15,000 , ரூ 10000 க்கான காசோலையையும் அதற்கான பாராட்டுச்சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வழங்கினார்
Next Story

