ராணுவத்தில் ஆட்கள் சேர்ப்பு முகாம் : ஏப்ரல் 10-ந் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

ராணுவத்தில் ஆட்கள் சேர்ப்பு முகாம் : ஏப்ரல் 10-ந் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
X
அக்னி வீரர்களின் பல்வேறு பிரிவுகளில் ஆட்சேர்ப்புக் கான பதிவு இப்போது ஆன்லைனில் திறக்கப்பட்டுள்ளது.
அக்னி வீரர்களின் (ராணுவத்தில்) பல்வேறு பிரிவுகளில் ஆட்சேர்ப்புக் கான பதிவு இப்போது ஆன்லைனில் திறக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப தாரர்கள் ஏப்ரல் மாதம் 10-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தமிழ் நாட்டில் உள்ள திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக் கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபு ரம், விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை ஆகிய 16 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள், புதுச் சேரியின் காரைக்கால் பகுதியை சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இதில் அக்னிவீர் பொதுப்பணி, தொழில்நுட்ப பிரிவு, அலுவலக உதவி யாளர்/ஸ்டோர் கீப்பர், டெக்னிக்கல், அக்னிவீர் டிரேட்ஸ்மேன் 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 8-ம் வகுப்பு தேர்ச்சி ஆகிய பிரிவுகளில் ஆன் லைனில் பதிவு செய்ய www.joinindianarmy.nic.in. ராணுவ இணையத ளத்தை அணுக வேண்டும் என திருச்சி கண்டோன்மெண்ட்டில் உள்ள ராணுவ ஆட்சேர்ப்பு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story