ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் இருந்த 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை பிடித்த தீயணைப்பு துறையினர்..*

X
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் இருந்த 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை பிடித்த தீயணைப்பு துறையினர்.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை நீரோடை பகுதி வழியாக வந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சுந்தரபாண்டியம் குடியிருப்பு அருகே இருந்துள்ளது. மலைப்பாம்பை பார்த்த பொதுமக்கள் வத்திராயிருப்பு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் போராடி 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையினர் உதவியுடன் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தீயணைப்புத் துறையினர் விட்டனர். சுந்தரபாண்டியம் குடியிருப்பு பகுதிக்குள் மலைப்பாம்பு வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story

