திருப்பத்தூரில் போட்டா ஜியோ சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

X
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் போட்டா ஜியோ சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் தமிழ்நாட்டில் பணிபுரியும் அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் ஒன்றிணைத்து போட்டா ஜியோ சார்பில் மாவட்ட முதன்மை ஒருங்கிணைப்பாளர் கோபி தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்,7 வது ஊதிய குழு நிர்ணயத்தில் 21 மாத நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக கோஷங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதில் அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

