ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
திருவள்ளூரில் ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும், உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி அருகே ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும், மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும், அரசாணை எண் 243-ஐ ரத்து செய்ய வேண்டும். 21 மாத ஊதிய நிலுவை தொகை உடனே வழங்க வேண்டும். காலி பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும், சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை சென்னை உயர்நீதி மன்ற ஆணையின்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும், உள்ளாட்சி அமைப்புகளிலும் பல்வேறு அரசுத் துறைகளிலும் தனியார் முகமை மூலம் பணியாளர்களை நியமனம் செய்வதை உடனடியாக தடைசெய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜாக்டோ- ஜியோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story





