பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் கரூர் மாவட்டம் 10-வது இடத்தை பிடித்துள்ளது. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் கரூர் மாவட்டம் 10-வது இடத்தை பிடித்துள்ளது. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. மார்ச் 28ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் கரூர் மாவட்டத்தில் மாணவர்கள் 5580 பேரும், மாணவிகள் 5660 பேரும் என மொத்தம் 11,240 பேர் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 5,297- பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவிகள் 5,520 பேர் என மொத்தம் 10,817 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 94.93. மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 97.53 சதவீதம். மொத்தத்தில் கரூர் மாவட்டம் 96.24% பெற்று மாநில அளவில் பத்தாம் இடத்தை பெற்றுள்ளது. மொத்தமுள்ள 188 பள்ளிகளில் 85 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் 115 அரசுப்பள்ளிகளில் 35 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story




