கோகிலாம்பாள் பள்ளியில் 10-ஆம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் நடத்துனரின் மகள் முதலிடம்

கோகிலாம்பாள் பள்ளியில் 10-ஆம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் நடத்துனரின் மகள் முதலிடம்
X
கோகிலாம்பாள் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் நடத்துனரின் மகள் சோபியா என்ற பெண் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
அரியலூர், மே.16- பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஜெயங்கொண்டம் கோகிலாம்பாள் மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயிலும் அரசு பேருந்து நடத்துனர் மகள் சோபியா என்கின்ற மாணவி 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.* தமிழக முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதையடுத்து தஞ்சை மாவட்டம் குறிச்சி கிராமத்தைத் சேர்ந்த வெங்கடேசன்- சத்யா தம்பதியினரின் மகள் சோபியா. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள குழவடையான் கோகிலாம்பாள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு கல்வி பயின்று வருகிறார். இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சோபியா என்கின்ற மாணவி 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்த சாதனை படைத்துள்ளார். தமிழில் 99 மதிப்பெண்ணும் மற்ற அனைத்து பாடங்களிலும் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். சாதனை படைத்த மாணவியின் தந்தை வெங்கடேசன், கும்பகோணம் அரசு பேருந்து நடத்துனராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சாதனை மாணவி சோபியா கூறும்போது, பயோ கெமிஸ்ட்ரி படித்து நீட் தேர்வு எழுதி டாக்டராவின் என்பதே எனது லட்சியம் எனவும். தனது தந்தை மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்ததாகவும் அவரது கஷ்டத்தை உணர்ந்து நான் கடினப்பட்டு படித்ததன் மூலம் அதிக மதிப்பெண் பெற்றுள்ளேன். புரிந்துகொண்டு படித்தால் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் எடுக்க முடியும் என தெரிவித்தார்.
Next Story