கிருஷ்ணகிரி அருகே ரூ.10 லட்சத்தில் புதிய நூலக கட்டிடம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

X
கிருஷ்ணகிரி அருகே உள்ள இட்டிக்கல் அகரம் பகுதியில் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்பிட்டில் பழைய நூலக கட்டிடத்தை அகற்றி புதிய நூலக கட்டிடம் கட்டப்பட்டது .இதற்கு மாவட்ட நூலக அலுவலர் சக்திவேல் தலைமை வகித்தார். இதில் கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ. அசோக்குமார் கலந்து கொண்டு நூலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு அவர் இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நூலக வளர்ச்சிக்காக எம்.எல்.ஏ. உள்பட 14 பேர் பெரும் புரவலர் மற்றும் புரவலர்களாக சேர்க்கப்பட்டனர்.
Next Story

