அரசு பள்ளிகளைச் சேர்ந்த 10 மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் கல்லூரி படிப்பு வரை செலவுகளை ஏற்றுக்கொள்ளும் விழா

அரசு பள்ளிகளைச் சேர்ந்த 10 மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் கல்லூரி படிப்பு வரை செலவுகளை ஏற்றுக்கொள்ளும் விழா
X
குமாரபாளையம் அருகே அரசு பள்ளிகளைச் சேர்ந்த 10 மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் கல்லூரி படிப்பு வரை செலவுகளை ஏற்றுக்கொள்ளும் விழா நடந்தது
குமாரபாளையம் அருகே அரசு பள்ளிகளைச் சேர்ந்த 10 மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் கல்லூரி படிப்பு வரை செலவுகளை ஏற்றுக்கொள்ளும் விழா நடந்தது. வேமன்காட்டுவலசு மற்றும் அருவங்காடு அரசு உயர்நிலைப் பள்ளி, அரசு மகளிர் மாதிரி பள்ளியில் படிக்கும் ஏழை எளிய 10 மாணவிகளை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஆண்டு தோறும் புத்தகப்பை, நோட்புக், உடைகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்குவதுடன், கல்லூரி படிக்கும் வரை ஆகும் செலவுகளை சுரபி பவுண்டேஷன் சார்பில், சென்னை நிர்வாக இயக்குனர் ராதாகிருஷ்ணன் செய்து வருகிறார். தலைமையாசிரியைகள் செல்வி, லோகசுந்தரி மற்றும் விடியல் பிரகாஷ் கல்வி உபகரணங்களை வழங்கினார்கள். எண்ணங்களின் சங்கமம் அமைப்பாளர் பிரபாகரன் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு மாணவிகள் நன்றி கூறினார்கள். ஆசிரியர்கள் குமார், அருள் மற்றும் சூரியா கார்மெண்ட்ஸ் உரிமையாளர் கோபாலகிருஷ்ணன், மகாலட்சுமி, பஞ்சாலை சண்முகம் உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story