சூலூர்: ரூ.10 லட்சம் மதிப்பில் ஓய்வறை கட்டிடம் திறப்பு

சூலூர்:  ரூ.10 லட்சம் மதிப்பில் ஓய்வறை கட்டிடம் திறப்பு
X
சூலூர் தொகுதியில், கருமத்தம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனையில் தொழிலாளர்களுக்காக ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ஓய்வறை கட்டிடத்தை, சட்டப்பேரவை உறுப்பினர் வி.பி. கந்தசாமி திறந்து வைத்தார்
சூலூர் தொகுதியில், கருமத்தம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனையில் தொழிலாளர்களுக்காக ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ஓய்வறை கட்டிடத்தை, சட்டப்பேரவை உறுப்பினர் வி.பி. கந்தசாமி இன்று திறந்து வைத்தார். இது அவரது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்டது. இந்த நிகழ்வில் தொழில்நுட்ப உதவி மேலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். கிளை மேலாளர் துரைசாமி வரவேற்புரை ஆற்றினார். தொழிற்சங்க மாவட்ட செயலாளர் செல்வராஜ், அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் கந்தவேல் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். எம்எல்ஏ கந்தசாமி பேசும்போது, தொழிலாளர்களுக்காக ஓய்வறை அமைத்ததில் பெருமைபடுகிறேன், மேலும் தேவையான உதவிகளை வழங்க தயாராக உள்ளேன் என்றார். இந்நிகழ்வில் பல தொழிற்சங்க பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Next Story