வெறி நாய்கள் கடிதத்தில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி

வெறி நாய்கள் கடிதத்தில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி
X
பழனி அருகே காளிப்பட்டியில் வெறி நாய்கள் கடிதத்தில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி
திண்டுக்கல் மாவட்டம் பழனி, மாட்டுப்பாதை அருகே காளிப்பட்டியில் விவசாயி ரவி என்பவர் தனது தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்து வைத்திருந்த 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை 4 வெறி நாய்கள் கடித்து குதறியது. இதில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் சம்பவ இடத்திலேயே பலியானது. 15-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடியது. இது குறித்து விவசாயி ரவி கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர்கள் ஆடுகளுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Next Story