பொது வசதி மையம் நடத்த ரூ 10லட்சம் கடனுதவி விருப்பமுள்ள சுய உதவி குழுவினருக்கு கலெக்டர் அழைப்பு

பொது வசதி மையம் நடத்த ரூ 10லட்சம் கடனுதவி விருப்பமுள்ள சுய உதவி குழுவினருக்கு   கலெக்டர் அழைப்பு
X
பொது வசதி மையம் நடத்த ரூ 10லட்சம் கடனுதவி விருப்பமுள்ள சுய உதவி குழுவினருக்கு கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.
அரியலூர், ஜூன்.17 பொது வசதி மையம் என்பது அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் செயல்படும் அரியலூர், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், செந்துறை, தா.பழூர் மற்றும் திருமானூர் ஆகிய ஆறு வட்டாரங்களில் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் உணவு தயாரிப்பில் ஈடுபடும் தொழில் முனைவோர்களுக்கு பேக்கிங் மற்றும் பிராண்டிங் செய்ய தேவைப்படும் வசதிகள் செய்து தருவதற்காக பொது வசதி மையம் (Common Facility Centre) புதிதாக அமைக்கப்பட உள்ளது. அவ்வாறு அமைக்கப்படும் பொது வசதி மையத்தினை செயல்படுத்திட ரூ.10 இலட்சம் கடன் உதவி வழங்கப்படும். நோக்கம்: • நியாயமான விலையில சீரான பேக்கேஜிங் மற்றும் பிராண்டிங்கை உறுதி செய்தல். • சந்தைப்படுத்தப்படும் அனைத்து பொருட்களிலும் உயர் தரத்தை பராமரித்தல். • பேக்கேஜிங் மற்றும் லேபிளிங் செய்வதற்கான செலவு குறைந்த உள்கட்டமைப்பைப் பயன்படுத்துதல். • “மதி” என்ற பொதுவான பிராண்டின் மூலம் சந்தைப்படுத்துதல் மற்றும் நுகர்வோர் நம்பிக்கையை அதிகரித்தல். இடத்தேர்வு செய்யும் முறை: பொது வசதி மையம் மாவட்டத்தின் மாவட்ட வழங்கல் மற்றும் சந்தைப்படுத்துதல் சங்க வளாக கட்டிங்களில் நிறுவப்படும். அத்தகைய உள்கட்டமைப்பு இல்லாத நிலையில் பயன்படுத்தப்படாத அரசு கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டு அனுமதி பெற்று பயன்படுத்திக்கொள்ள வேண்டும். • கட்டுமானப் பரப்பளவு குறைந்த பட்சம் 300 சதுர அடியாக இருக்க வேண்டும். • 3 கட்ட மின் இணைப்பு வசதி உறுதி படுத்த வேண்டும். • மையத்தில் சேமிப்பு இடம், விளக்குகள், நீர் வழங்கல், சுகாதாரம் மற்றும் காற்றோட்டம் போன்ற அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும். • வாடகைத் தொகை மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலுக்கு உட்பட்டு, மாவட்ட நிர்வாகத்தால் உச்ச வரம்பை மீறாமல் உள்ளுர் சந்தை விகிதத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட வேண்டும். • பொருட்களின் சீரான இயக்கம் மற்றும் சிறந்த தளவாட செயல்பாடுகளை உறுதி செய்வற்காக சிஎப்சி யின் இருப்பிடம் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு எளிதில் அணுகக்கூடியதாக இருத்தல் வேண்டும். • பிரதான பேருந்து வழித்தடத்தில் (அல்லது) போக்குவரத்து இணைப்பு உள்ள பகுதிகளில் அமைந்திருக்க வேண்டும். தகுதி A அல்லது B தரமதிப்பீட்டினை கொண்ட இரண்டு ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ள சுய உதவிக்குழு அல்லது சமுதாயக்குழுக்களாக இருக்க வேண்டும். • சுய உதவிக்குழுக்கள் CFC-யிலிருந்து 5 கிமீ சுற்றளவில் இருப்பின் முன்னுரிமை வழங்கப்படும். பண்ணை மற்றும் பண்ணை சாரா உற்பத்தி பொருட்களை உற்பத்தி செய்தல், மதிப்பு கூட்டுதல் மற்றும் பதப்படுத்துதில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.தகுதியான சுய உதவிக்குழுக்கள் அருகாமையில் இல்லாத சந்தர்பங்களில் அந்தந்த தொகுதி அல்லது மாவட்ட அளவிலான கூட்டமைப்பு நிறைவேற்றி முறையான தீர்மானத்தின் அடிப்படையில் பிற சமூக அல்லது மகளிர் குழு அமைப்புகள் பரிசீலிக்கப்படும். பொது வசதி மையத்தை நடத்துவதற்கான விதிகள்: தேர்ந்தெடுக்கப்படட சுய உதவிக்குழு அல்லது சமூக தலைமை அலுவலர் மட்டுமே மையத்தை நிர்வகிக்க வேண்டும். தனி நபர் அல்லது நிறுவனத்திடம் வழங்கப்படக் கூடாது. • பயிற்சி பெற்ற சமுதாய வள பயிற்றுநர்கள் அல்லது சமூக தலைமை அலுவலர்கள மட்டுமே நிறுவனத்தை நடத்த வேண்டும். • மையமானது சந்தை மதிப்பை விட குறைந்த விலையிலும், பொது மக்களுக்கு நியாயமான சந்தை விலையிலும் விற்க வேண்டும். திட்ட காலம் ஒராண்டு திட்டத்திற்கான மதிப்பு ரூ.10 லட்சம் எனவே, இத்திட்டத்தில் இணைய விருப்பமுள்ள சுய உதவிக்குழுக்கள் தங்களது விண்ணப்பங்களை திட்ட இயக்குநர் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், இரண்டாம் தளம், அறை எண்: 215, மாவட்ட ஆட்சியரகம் அலுவலகம், அரியலூர் என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ 30.06.2025 அன்று பிற்பகல் 5.மணிக்குள் அனுப்ப வேண்டும். மேலும், விவரங்களுக்கு 9360064675 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி தெரிவித்துள்ளார்
Next Story