கையூட்டு பெற்ற 10 போலீசார் : எஸ் பி நடவடிக்கை

கையூட்டு பெற்ற 10 போலீசார் : எஸ் பி நடவடிக்கை
X
கன்னியாகுமரி
. கன்னியாகுமரி மாவட்டத்தில் உரிய அனுமதி சீட்டு இல்லாமல் அதிக பாரத்துடன் எம்சென்ட் கொண்டு செல்ல லஞ்சம் பெற்று அனுமதித்து பணியில் நேர்மை தவறிய ஹைவே பெட்ரோல் மற்றும் காவல் நிலைய போலீசார் மீது தற்போது எஸ் பி ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. அதிக பாரம் ஏற்றி செல்லும் கனிமவள வாகனங்கள் விவகாரத்தில் தொடர்புடைய குற்றச்சாட்டுகளில் கூறப்படும் போலீசாரை அதிரடியாக எஸ் பி மாற்றியுள்ளதாகவும். மார்த்தாண்டம் காவல் நிலையம், களியக்காவிளை காவல் நிலையம் மற்றும் புதுக்கடை காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்களில் பணிபுரிந்த போலீசார் மற்றும் ஹைவே பெட்ரோல் வாகனத்தில் பணிபுரிந்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உட்பட போலீசார் ஏழு பேர் ஆயுதப்படைக்கும் மேலும் ஒரு சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் இரண்டு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர் . தவறு செய்யும் போலீசார் மீது அதிரடி நடவடிக்கை எடுப்பதன் மூலம் சட்டவிரோத செயல்களை தடுப்பதற்கு மாவட்ட எஸ்பி முன்னுரிமை கொடுத்து வருவது அவரது செயல்பாட்டின் மூலம் தெரிய வருகிறது.
Next Story