இன்ஸ்டாகிராமில் டிரெண்டாகி வரும் விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி பெரியார் பிளவக்கல் அணையில் ரூ 10 கோடி மதிப்பில் பூங்கா மேம்பாட்டு பணி நடைபெறும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார

X
இன்ஸ்டாகிராமில் டிரெண்டாகி வரும் விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி பெரியார் பிளவக்கல் அணையில் ரூ 10 கோடி மதிப்பில் பூங்கா மேம்பாட்டு பணி நடைபெறும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார் அந்த பணிகளை தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் நாடாளுமன்றம் சட்டமன்றம் உள்ளாட்சி மன்றம் அனைத்திலும் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்பு திருத்த சட்டம் வக்பு சொத்துக்களை கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு கொண்டுவரப்பட்டுள்ளது முருக பக்தர்கள் மாநாடு ஆன்மீக மாநாட்டில் குறிப்பிட்ட அரசியல் கட்சியை விமர்சனம் செய்து பேசுவது ஆன்மீக மாநாட்டை கொச்சைப்படுத்தும் நடவடிக்கை வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் பயணிப்போம் அதிக தொகுதிகள் ஒதுக்க கோரிக்கை விடுப்போம் அருப்புக்கோட்டையில் விருதுநகர் மாவட்ட ஜமாத்து நிர்வாகிகள் உலமாக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு பின் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாஹ் செய்தியாளர்களுக்கு பேட்டி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மதுரை சாலையில் உள்ள தர்கா வளாகத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் விருதுநகர் மாவட்ட ஜமாத் நிர்வாகிகள் மற்றும் உலமாக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாஹ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாஹ், மதுரையில் வரும் ஜூலை ஆறாம் தேதி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியும் மாநாடு நடைபெற உள்ளது. அதில் முதல் கோரிக்கை உள்ளாட்சி முதல் நாடாளுமன்றம் வரை முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாகியும் நாடாளுமன்றம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது. இந்தியாவில் 15 சதவீதம் முஸ்லிம்கள் உள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் 80 பேர் முஸ்லிம்களாக இருக்க வேண்டும். ஆனால் 24 பேர்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். அதேபோல ராஜ்ய சபாவிலும் இந்தியாவில் உள்ள அனைத்து சட்டமன்றங்களிலும் இதே நிலைதான் இருக்கிறது. உள்ளாட்சி மன்றங்களிலும் இதே அவல நிலைதான் இருக்கிறது. அதேபோல மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்பு திருத்த சட்டம் வக்பு சொத்துக்களை கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை சமூக நல்லிணக்கம் கொண்ட அனைத்து கட்சிகளும் நாடாளுமன்றத்தில் உள்ளேயும் வெளியையும் கடுமையாக எதிர்கின்றன அதேபோல நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ள நிலையில் மத்திய அரசு நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் வக்ஃபு திருத்தச் சட்டத்தை பதிவேற்றும் வகையில் இணையத்தை துவங்கி வக்ஃபு சொத்துக்களை பதிவேற்றம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மத்திய அரசு சொல்லி உள்ளது இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். இந்த இரண்டு கோரிக்கைகளையும் வலியுறுத்தி ஜூலை 6 மதுரை பாண்டி கோவில் அருகே பேரணியாக துவங்கி அதனை தொடர்ந்து மாநாடும் நடைபெற உள்ளது என கூறினார். மேலும் அதேபோல நீண்ட நெடிய காலமாக சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அருப்புக்கோட்டையில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருகிறது அந்த பணிகளை விரைந்து முடித்து அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திற்கு காயிதே மில்லத் பெயர் சூட்ட வேண்டும். "அதேபோல் விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி பெரியார் பிளவக்கல் அணையில் ரூ 10 கோடி மதிப்பில் பூங்கா மேம்பாட்டு பணி நடைபெறும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார் அந்த பணிகளை தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுப்பதாக கூறினார்* ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. இந்தியாவில் அதிகாரம் என்பது ஒவ்வொரு மட்டத்திலும் ஒவ்வொரு விதமாக உள்ளது. அருப்புக்கோட்டை நகராட்சி தொடர்பான பிரச்சனைகள் ஒருசில இருக்கும். கூமாபட்டி ஊராட்சியில் பிரச்சினைகள் சில இருக்கும். இந்தியா என்பது ஒன்றியங்களால் அமைந்த நாடு என அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஜனநாயகத்தின் அடி வேர்களை அழிக்கும் முயற்சியாக நாங்கள் இதை பார்க்கிறோம். மதுரை முருக பக்தர்கள் மாநாடு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஆன்மீக மாநாடு என்பதை யார் வேண்டுமானாலும் நடத்தலாம். அதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு. அதே நேரத்தில் இதுபோன்று ஆன்மீக மாநாட்டில் குறிப்பிட்ட சமூகத்தை குறிப்பிட்ட அரசியல் கட்சியை விமர்சனம் செய்து பேசுவது ஆன்மீக மாநாட்டை கொச்சைப்படுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, தமிழ்நாட்டில் திமுக சிறப்பான ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வீடும் இந்த ஆட்சியில் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து பயணிக்கும் தொடர்ந்து பயணிக்கும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மீண்டும் அடுத்த தேர்தலில் முதலமைச்சராக பதவி ஏற்பார் என கூறினார் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக சீட்டுகள் ஆட்சியில் பங்கு என்பதில் மனிதநேய மக்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, எங்கள் கோரிக்கை சட்டமன்றம் நாடாளுமன்றம் உள்ளாட்சி மன்றம் அனைத்திலும் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். தமிழக சட்டமன்றத்தில் உள்ள 234 தொகுதிகளில் தமிழகத்தில் உள்ள முஸ்லிம்கள் கணக்குப்படி முஸ்லிம்கள் 14 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்க வேண்டும் ஆனால் தற்போது ஏழு சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். எனவே முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கூடிய வகையில் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் கூட்டணி கட்சிகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும். எங்களுக்கும் அதிகமான இடங்களை தர வேண்டும் என்ற கோரிக்கையை நிச்சயமாக வைப்போம் என கூறினார்.
Next Story

