தம்பியை கொன்ற அக்கா, அக்காவின் கணவர் மற்றும் மகன் ஆகிய மூன்று நபர்களுக்கு 10 ஆண்டுகள் தண்டனை

குமாரபாளையம் அருகே சொத்து தகராறில் தம்பியை கொன்ற அக்கா, அக்காவின் கணவர் மற்றும் மகன் ஆகிய மூன்று நபர்களுக்கு திருச்செங்கோடு கூடுதல் அமர்வு நீதிமன்றம்.10 ஆண்டுகள் தண்டனை விதித்தது.
குமாரபாளையம் அடுத்துள்ள வேமன்காட்டுவலசு பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல்,37. இவருக்கு திருமணம் ஆகாததால், அவரது பங்கு நிலத்தை அடைய வேண்டி, கடந்த 2019 ஆம் ஆண்டு சொத்து தகராறில் பழனிவேலை அவரது சகோதரி கலா, 54, அவரது கணவர் சாந்தகுமார், 60, அவரது மகன் பூபேஷ், 26, ஆகிய மூன்று நபர்களை போலீசார் கைது செய்தனர். 2019, மே. 4ல் நடந்த இந்த கொலை சம்பவம் சம்பந்தமாக, தொடர்ந்து வழக்குகள் நடைபெற்ற வந்த நிலையில் தற்போது இந்த மூன்று நபர்களுக்கும் திருச்செங்கோடு கூடுதல் அமர்வு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. தொடர்ந்து சிறப்பான முறையில் சாட்சிகளை ஆஜர் செய்து, சாட்சியம் சொல்ல வைத்து, சாட்சியத்தின் அடிப்படையில் தீர்ப்பை வழங்கிய நீதிமன்றத்திற்கும், உறுதுணையாக இருந்த குமாரபாளையம் போலீசாருக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
Next Story